×

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

திருப்பூர், ஜன. 26:    தமிழகத்தின் சார்பாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர். அதன்படி தேசிய அளவில் சண்டிகர் மாநிலத்தில் நடந்த ஜூனியர் சாம்பியன்சிப் கையுந்துப்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை திருப்பூர் மாணவர் தினவர்ஷத் வென்றார். அதே போல தேசிய அளவில் ஆந்திரா மாநிலத்தில் நடந்த 56வது ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டு 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற திருப்பூர் மாணவர் செல்வஸ்ரீ கண்ணன் ஆகியோரை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஊக்கத்தொகையாக தலா ரூ.2 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கினார்.
சாலரப்பட்டியில்

Tags :
× RELATED அரியலூர் மாவட்டத்தில் தேசிய அளவிலான...