×

வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து கவுன்சிலர் வெளிநடப்பு

அவிநாசி ஜன.26:அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழுக்கூட்டம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர்பிரசாத்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் உமாபதி, கார்த்திகேயன், சேதுமாதவன், முத்துசாமி, ஜெயந்தி, உமாபதி உள்ளிட்ட  வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்களின் விவாதம் வரும்மாறு:

இதில் பழங்கரை ஊராட்சி ஊராட்சி ஒன்றிய குழு 10 வார்டு கவுன்சிலர் கார்த்தி பேசுகையில்: 15 நாட்களுக்கு முன்பு பழங்கரை ஊராட்சி குடிநீர் பிரச்சனை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரனிடம் பொதுமக்கள் தெரியப்படுத்தினர். அப்போது பொதுமக்களிடம் ஒன்றியக்குழு உறுப்பினர் என்று கூட பாராமல் என்னை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன் தரக்குறைவாக பேசினார். இதனை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறேன். இவ்வாறு கூறி கவுன்சிலர் கார்த்தி கூட்ட அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

முத்துசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் :
கணியம்பூண்டி பகுதியில் கழிவுநீர் விடப்படுவதால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
சேதுமாதவன் (திமுக) : அம்பாள் காலனி வெற்றி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தார்சாலை அமைக்க பூமி பூஜை போட்டு ஆறு மாதங்களாகியும் இன்னும் பணிகளை தொடங்கவில்லை. அதேபோல லட்சுமியும் ஆகியவற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை செய்து பல நாட்களாகியும் இன்னும் பணிகளை தொடங்கவில்லை. எனவே விரைவில் முடிக்க வேண்டும். பழங்கரை ஊராட்சியில் இடிந்த கட்டடத்தில் செயல்படும் தபால் நிலையம் நூலக கட்டிடம் ஆகியவற்றை வேறு இடத்துக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன்: ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலனைசெய்து, விரைவில் நிறைவேற்றப்படும். இதையடுத்து பல்வேறு மன்றப்பொருள் வாசிக்கப்பட்டு அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Tags : Councilor ,meeting ,Regional Development Officer ,Union Committee ,
× RELATED கோவில்பட்டி அருகே காரில் கொண்டு சென்ற ₹80 ஆயிரம் பறிமுதல்