தாய்மொழியில் பயிற்றுவிக்கக்கோரி 3வது ஆண்டாக மவுன விரதம்

திருப்பூர், ஜன. 26: தொடக்கக்கல்வி முதல், மேல்நிலைக்கல்வி வரை அனைத்து பாடங்களும் தாய்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும். தமிழ்மொழியை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2018 மார்ச் 24 முதல் ‘இயற்கை வாழ்வகம்’ முத்துசாமி மவுன விரதம் இருந்து வருகிறார். அவரது போராட்டத்தை பாராட்டி, சன்மார்க்க சங்க தலைவர் நீரணி பவளக்குன்றன் தலைமையில் விழா நடந்தது. திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கவுரவ தலைவர் ராமசாமி, உலக திருக்குறள் பேரவை செயலாளர் நாகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அன்புசெழியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முத்தமிழ் சங்க செயலாளர் பாலசுப்பிரமணி வரவேற்றார். ‘நிட்மா’ தலைவர் ரத்தினசாமி, தாய்த் தமிழ் பள்ளி நிறுவனர் முத்துசாமி, எல்.ஆர்.ஜி. கல்லுாரி பேராசிரியை ஈஸ்வரி, வரலாற்று ஆய்வாளர் சிவதாசன் உட்பட பலர் பேசினர்.

Related Stories: