பைக் மீது கார் மோதல் பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

அவிநாசி,ஜன.26:  அவிநாசி அருகே செம்பியநல்லூர்ஊராட்சி வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (23) பெட்ரோல் பங்க் ஊழியர். இவர் தனது நண்பர் நந்தகுமாருடன் (23) அன்னூர் ரோட்டில்  பைக்கில் சென்று கொண்டிருந்தார். வெள்ளியம்பாளையத்தில் ஒரு தனியார் ஸ்பின்னிங் மில் அருகில் சென்றுகொண்டிருந்த போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் இவர்களின்பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட  வினோத்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

Related Stories:

>