படியூரில் காளைமாடுகளுடன் விவசாயிகள் போராட்டம்

காங்கயம், ஜன.26:காங்கயம் அருகே உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் நேற்று காளை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கயம் அருகே படியூரில் உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம், நிலத்தின் பட்டா நகலை எரித்து எதிர்ப்பு, ரத்தத்தில் எழுதி எதிர்ப்பு தெரிவித்து வருவது என நூதனமான முறையில் நடைபெற்று வருகிறது. இதில் ஆறாவது நாளான நேற்று மதியம் சிறப்பு கவனயீர்ப்புப் போராட்டமாக காளை மாடுகளுடன் போராட்டத்தை நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>