×

ரூ.50.35 கோடியில் மேற்கு புறவழிச்சாலை இரு வழிப்பாதையாகிறது

பொள்ளாச்சி, ஜன. 26: நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.50.35 கோடியில் மேற்கு புறவழிச்சாலையை இரு வழிப்பாதையாக மாற்றுவதற்கான பணியை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று துவக்கி வைத்தார். பொள்ளாச்சி -பாலக்காடு ரோட்டில்நல்லூர், முத்தூர், மண்ணூர், ராமபட்டிணம், கோபாலபுரம் மற்றும் கேரள  பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. இந்தநிலையில், பொள்ளாச்சி கோவைரோடு சக்தி மில்லிருந்து மீன்கரைரோடு ஜமீன்ஊத்துக்குளி கைக்காட்டி வரையிலும் உள்ள ஒரு வழிபாதையை, இரண்டு வழி பாதையாக மாற்றி மேற்கு புறவழிச்சாலை அமைக்க சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

பின், புறவழிச்சாலை அமைய உள்ள ஆ.சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, முத்தூர், நல்லூர் பிரிவு, ஜமீன்ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் வெவ்வேறு கட்டமாக கருத்துகேட்பு கூட்ட நடைபெற்றுள்ளது. மேலும், மேற்கு புறவழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இதையடுத்து ஆச்சிப்பட்டியருகே சக்திமில்லில் இருந்து பாலக்காடுரோடு ஜமீன்ஊத்துக்குளி கைகாட்டி வரையிலும் ரூ.50.35 கோடியில் மேற்கு புறவழிச்சாலை இரு வழிப்பாதையாக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று மதியம், வடக்கிபாளையம் ரோடு பொன்னாபுரம் பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்றது.

இதற்கு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கி, புறவழிச்சாலை அமைக்கும் பணியை பூமி பூஜைபோட்டு துவக்கி வைத்தார். இதில், முன்னாள் அமைச்சர் தாமோதரன், சப் கலெக்டர் வைத்திநாதன், ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஆச்சிப்பட்டி ஊராட்சி தலைவர் ரங்கநாதன், வீராசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,கோவை ரோடு  சக்தி மில்லிலிருந்து, மீன்கரைரோடு ஜமீன்ஊத்துக்குளி பிரிவு வரையிலும் உள்ள தூரத்துக்கு, வெவ்வேறு இடங்களில் ஒரு வழிச்சாலையை இரு வழிசாலையாக  அமைப்பதற்கான பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. அப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Tags : Western Bypass ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு