மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா

ஊட்டி,ஜன.26: நீலகிரி மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 162 ஆக உயர்ந்தது.     நீலகிரி மாவடத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 6 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில்,  பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 162 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 10 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில்  8 ஆயிரத்து 64 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 51 பேர் மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உள்ளது.

Related Stories:

>