சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டி,ஜன.26: ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வார விழா அனுசரிக்கப்படும். இம்முறை இம்மாதம் 18ம் தேதி முதல் அடுத்த மாதம் 17ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி அருகேயுள்ள கேத்தி பாலாடா அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், சாலை பாதுகாப்பு குறித்தும், சாலை விதிகளை மதிப்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கலந்துக் கொண்டு சாலை விதிகள் குறித்தும், சாலை விதிகளை மதிப்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, ஆசிரியர்கள் குமார், சசிகுமார் ஆகிேயார் கலப்துக் கொண்டு சாலை விதிகளை மதிப்பது குறித்து விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சந்திரசேகர், அசோக், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>