மனித நேய வாரவிழா

பந்தலூர்,ஜன.26: பந்தலூர் அருகே கையுன்னி மங்கரை மற்றும் குந்தலாடி ஓர்கடவு பகுதிகளில்  பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வாரவிழா நிகழ்ச்சி  நடைப்பெற்றது. பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி கையுன்னி மங்கரை மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சி குந்தலாடி ஓர்கடவு ஆகிய  பழங்குடியினர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பில் மனித நேய வாரவிழா நேற்று நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் முதுநிலை வருவாய் ஆய்வாலர் காமு மற்றும் வருவாய் ஆய்வாளர் முரளி,கிராம நிர்வாக அலுவலர் அபிராமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மனிதநேயம் குறித்தும் பழங்குடியினர் மக்களின் கல்வி மற்றும் சமூக மேம்பாடு குறித்தும் அடிப்படை வசதிகள் குறித்தும் பேசினர். ஏராளமான பழங்குடியினர் மக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>