அணைகள், மின் நிலைய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு

மஞ்சூர்,ஜன.26: குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளா பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கேரளா பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக எல்லையிலும் மாவோயிஸ்டுகள் ஊடுறுவும் வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு எஸ்.பி. சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்ட எல்லை பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழக கேரளா எல்லையில் உள்ள கிண்ணக்கொரை, கோரகுந்தா, அப்பர்பவானி, முள்ளி பகுதிகளில் அதிரடிபடை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்கானிப்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பரளி அணைக்கட்டுகள் மற்றும் குந்தா, கெத்தை மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு காண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சப்.இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மேற்பார்வையில் ஓணிகண்டி, தொட்டகம்பை பகுதிகளில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

Related Stories: