முடங்கி கிடக்கும் ரயில்வே மேம்பால பணி; 28ம் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன. 26:  கோவையில் முடங்கி கிடக்கும் ரயில்வே மேம்பாலம் பணியை விைரந்து துவக்கக்கோரி தி.மு.க. சார்பில் நாளை மறுதினம் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை அவினாசி சாலை பீளமேடு ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து தண்ணீர் பந்தல், விளாங்குறிச்சி வழியாக சரவணம்பட்டி சென்றடையும் சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்த சாலையில் உள்ள ரயில்வே கேட் நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட  முறை மூடப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இந்த இடத்தில், ரயில்வே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில்,  ரூ.12 கோடி மதிப்பீட்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், சுமார் பத்து  ஆண்டுகளாகியும் 10 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது. மீதமுள்ள பணிகள்  அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இந்த மேம்பால கட்டுமான பணி முடங்கி கிடப்பதால், அப்பகுதி மக்கள் வேறு பாதையில் சுமார் 2  கி.மீ. தூரம் சுற்றி பயணிக்கின்றனர். இதேபோல், கோவை மாநகரில் மேம்பால பணிகள் அனைத்தும் முடங்கி கிடப்பதால், நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமில்லை.

தொடர் போக்குவரத்து நெருக்கடி காரணமாக, வாகன ஓட்டிகள், மன உளைச்சலுக்கு ஆளாகி, சாலை விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர், குறித்த நேரத்தில் செல்ல முடிவதில்லை.எனவே, ஹோப் காலேஜ் தண்ணீர் பந்தல் ரயில்வே உயர்மட்ட மேம்பால பணிகள் விரைந்து துவக்கவேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நாளை மறுதினம் (28ம் தேதி) மாலை 4 மணிக்கு, ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் அருகில்,  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தரப்பினரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

வீர வணக்க நாள் கூட்டம்

கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இதில் மாநில பொது துணை செயலாளர் அந்தியூர் செல்வராஜ் பேசினார். அருகில் மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமசந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் பலர் உள்ளனர்.

Related Stories: