×

டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அந்தியூர், ஜன. 26:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளப்பிள்ளையார் கோவில் அருகே பர்கூர் செல்லும் ரோட்டிலன் ஓரத்தில் புதியதாக டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கடையை திறக்கக்கூடாது என பல முறை கட்சியினர் சார்பில் அதிகாரிகளிடத்தில் மனு கொடுத்தும் இது வரை யாரும் இது சம்பந்தமாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும் அதிகாரிகள் கடையை திறப்பதற்கே மும்மரம் காட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படும் என்பதால்,  புதியதாக இங்கு அரசு மதுபானக் கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

தி.மு.க ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் இ.கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வி.பி. குணசேகரன், சி.பி.எம். தாலுகா செயலாளர் முருகேசன், வி.சி.க. ஒன்றிய செயலாளர் தங்கராசு, மைக்கேல்பாளையம் ஊராட்சி தலைவர் சரவணன் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளான இ.கம்யூனிஸ்ட், வி.சி.க.வை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.

Tags : DMK ,opening ,Tasmac ,store Coalition parties ,
× RELATED திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு