திம்பம் மலைப்பாதையில் லாரி பாறையில் மோதி விபத்து

சத்தியமங்கலம், ஜன. 26: சத்தியமங்கலம்  - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த  வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை  அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் கர்நாடகம் இரு  மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  நேற்று மாலை கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து செண்டுமல்லி பூ  பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளி பகுதியில் உள்ள தனியார்  செண்டுமல்லி ஆலைக்கு செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக  சென்றுகொண்டிருந்தது.

லாரி 20வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது,  கட்டுப்பாட்டை இழந்து லாரி மலைப்பாதை ஓரத்தில் உள்ள பாறையில் மோதி நின்றது.  இதன் காரணமாக லாரி 300 அடி பள்ளத்தாக்கில் விழாமல் நின்றதால் லாரி  ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சாலையோரம் பாறையில் லாரி மோதி  நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து  ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: