×

வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான்

ஈரோடு, ஜன. 26: தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில், திண்டல் வேளாளர் கல்லூரியில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. இதனை ஈரோடு கலெக்டர் கதிரவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் பெருந்துறை ரோடு வழியாக செங்கோடம்பள்ளம், பழையபாளையம், குமலன்குட்டை வழியாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் தின உறுதி மொழியினை கலெக்டர் கதிரவன் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

பின்னர், மாரத்தானில் பங்கேற்றவர்களுக்கும், ஓவிய போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகளில் சிறந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களையும் கலெக்டர் கதிரவன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். 12 புதிய வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ. கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாலாஜி (பொது), ஈஸ்வரன் (கணக்குகள்), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாணிலட்சுமி ஜெகதாம்பாளர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இளங்கோ உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Awareness Marathon ,Voter Day ,
× RELATED தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: மார்ச் 31ல் நடைபெறுகிறது