×

எஸ்.எல்.பி. பள்ளியில் அறிவியல் திறன் மேம்பாட்டு பயிற்சி

நாகர்கோவில், ஜன.26 :மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளிகளில் அடல் டிங்கரிங் லேப் அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் எஸ்.எல்.பி.பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தில் சுமார் ₹20 லட்சம் மதிப்பிலான  கருவிகள் உள்ளன. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடக்கின்றன. இதில் 6ம் வகுப்பில் இருந்து 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு நேற்று பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அடல் டிங் கரிங் ஆய்வகத்தில் உள்ள டெலஸ்கோப் உள்ளிட்ட பல்வேறு கருவிகளை பார்த்து, அதன் செயல்பாடுகளை தெரிந்து கொண்டனர்.  பயிற்றுனர்கள் ஐஸ்வர்யா மற்றும் ஷைனி கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.  மாணவர்கள் பெற்றோர் ஒப்புதலுடன் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வேலவன், பொறுப்பாசிரியர் ஆனிபிரிடா மற்றும் ஆசிரியர்கள் சுரேஷ், புஷ்பலதா, ராஜகுமாரி, மாணிக்கரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : school ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி