×

குடியரசு தினத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் ரக்ஷாகிரீன் ஆப்பரேஷன்

கன்னியாகுமரி, ஜன.26: குடியரசு தின விழாவையொட்டி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று ரக்ஷாகிரீன் ஆப்பரேஷன் என்ற தீவிரவாதிகள் ஊடுருவதல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் அதிநவீன ரோந்து படகுகளில் கடலில் ரோந்து சென்றனர். கூடன்குளம் அணுஉலையின் பின்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து  27ம் தேதி மாலை 5 மணி வரை இந்த ஆப்பரேஷன் நடக்கிறது. மேலும் கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கட்டாயமாக அரசால் அனுமதிக்கப்பட்ட படகில் தான் செல்ல வேண்டும். அரசு வழங்கிய அடையாள அட்டை வைத்திருக்க ேவண்டும் என கூறியுள்ளனர். மேலும் சந்தேகப்படும்படியான படகுகள் அல்லது புதிய நபர்கள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 குமரி மாவட்டத்தில் உள்ள 48 கடலோர மீனவ கிராமங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மகாதானபுரம், மாதவபுரம், சின்னமுட்டம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டம் ஆகிய 6 இடங்களில் கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு சொந்தமான சோதனைசாவடிகளிலும் போலீசார் முழு நேர சோதனையில் ஈடுபடுகின்றனர். அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இதுபோல் கடலோர பாதுகாப்பு குழும ேபாலீசாரின் மாதாந்திர பாதுகாப்பு ஓத்திகையான சஜாக் ஆப்பரேஷனும் இன்று காலை தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.


Tags : sea ,occasion ,Kanyakumari ,Republic Day ,
× RELATED குமரியில் ஒரே நேரத்தில் சூரியன் அஸ்தமனம், சந்திரன் உதயம்