×

நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பைக் ஊர்வலம்

நாகர்கோவில், ஜன.26: தமிழகத்தில் ஜனவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி நேற்று பைக் ஊர்வலம் நடந்தது. வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. விஜயகுமார் எம்.பி. கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வெளியிட்டார். வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மபிரியா, டிராபிக் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். வடசேரியில் இருந்து தொடங்கி மணிமேடை, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, டிஸ்லரி ரோடு வழியாக  வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் ஊர்வலம் முடிந்தது. செல்போன் பேசிக் கொண்டு வாகனங்கள் ஓட்டாதீர்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள். ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டவும் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து இருந்தனர்.

Tags : Nagercoil ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...