மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் ₹161 கோடி மதிப்பில் தடுப்பணை கட்ட அவசர கதியில் பூமிபூஜை

மரக்காணம், ஜன. 26: மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் ரூ.161 கோடி மதிப்பில் தடுப்பணை கட்ட அவசர கதியில் பூமிபூஜை போடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் ரூ.161 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்று கடந்த இரண்டு ஆண்டுக்குமுன் அதிமுக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்போடு எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் வெற்று அறிவிப்போடு இல்லாமல் தடுப்பணை கட்டும் பணியை துவங்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நேற்று அவசரகதியில் பக்கிங்காம் கால்வாயில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான பூமிபூஜை அமைச்சர் சிவி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக்தோமர், விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபிசிங், திண்டிவனம் சப்-கலெக்டர் அணு, மரக்காணம் வட்டாட்சியர் உஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாசி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். தற்போது அவசரகதியில் பூமிபூஜை நடந்ததால் வரும் தேர்தலுக்காக மட்டும் அல்லாமல் இப்பணியை உடனடியாக துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்குள்ள

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: