×

நாமக்கல் ஜி.ஹெச்சை இடம் மாற்ற வேண்டும்

நாமக்கல், ஜன.26: அகில இந்திய பாரத அன்னையர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் சிவக்குமார்  தலைமையில் மாவட்ட தலைவர் சந்துரு, மகளிர் அணி தலைவி பூங்கொடி ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு விபரம்: நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை இடமாற்றம் செய்ய வேண்டும். இதனால் காற்று மாசு, ஒளி மற்றும் ஒலி மாசு ஏற்படாத வண்ணம் நோயாளிகள் சுகாதாரமான சிகிச்சை பெற வழி வகுக்கும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாளர்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்க நகரின் மையப்பகுதியில் வட்டப்பாலங்கள் மற்றும் 2 அடுக்கு மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். வேட்டாம்பாடியில் மின்கம்பங்கள் அமைத்து தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி, சாலைகளை சீர் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED 19ம் தேதி விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்