×

ராசிபுரத்தில் ₹45 லட்சத்திற்கு

பருத்தி விற்பனைராசிபுரம், ஜன.26: ராசிபுரம் கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத்தில், ₹45 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர். கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. ஆர்சிஎச் ரக பருத்தி 1787 மூட்டைகளும், டிசிஎச் ரகம் 416 மூட்டைகள் என மொத்தம் 2,203 மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆர்சிஎச்., ரகம் ₹6,686-க்கும், குறைந்தபட்சம் ₹5,341-க்கும் விலை போனது. இதேபோல் டிசிஎச். ரகம் அதிகபட்சம் ₹8,519-க்கும் குறைந்த பட்சம் ₹7,687க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹45 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.

Tags : Rasipuram ,
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்