×

சத்துணவு மையத்தில் ஐஎஸ்ஓ நிறுவன இயக்குநர் ஆய்வு

கிருஷ்ணகிரி, ஜன.26: கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில், சென்னையிருந்து வந்த ஐஎஸ்ஓ நிறுவன இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், பள்ளியில் உள்ள காய்கறித் தோட்டம் மற்றும் வளர்ப்புச் செடிகளை பார்வையிட்டு பாராட்டினர். மேலும் சத்துணவில் மாணவ, மாணவியருக்கு முளைக் கட்டிய கம்பு வழங்கியதையும் பாராட்டினர். இக்குழுவினர் சத்துணவுக் கூடம், சமையலறை, கை கழுவும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மாணவ, மாணவியரிடம் சத்துணவு தரமாக வழங்கப்படுகிறதா என  கேட்டறிந்தனர். மதிய உணவு இடைவேளையின் போது, தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவியருடன் அமர்ந்து குழுவினர் சத்துணவை சாப்பிட்டனர். இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வன், உதவி கணக்கு அலுவலர் சென்னகேசவன் மற்றும் என்.எம்.பி., உதவியாளர் சண்முகம், பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேலு, சத்துணவு அமைப்பாளர் அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : ISO ,Nutrition Center ,
× RELATED சென்னை ஐஐடியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு