10 மாதங்களுக்கு பிறகு ஓசூரில் உழவர் சந்தை திறப்பு

ஓசூர், ஜன.26: ஓசூர் உழவர் சந்தைக்கு நாள்தோறும் சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பண்டிகை நாட்களில் காய்கறிகள், பூக்கள், பழங்கள் என நாள் ஒன்றுக்கு 12 டன் முதல் 15 டன் வரை விற்பனையாகும்.  இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக சந்தையை திறக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உழவர் சந்தையை மீண்டும் திறக்க கோரி விவசாயிகள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், திமுக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தியதையடுத்து, கடந்த 10 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் உழவர் சந்தை திறக்கப்பட்டது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எம்ஜிஆர் பிறந்தநாள்

விழா பொதுக்கூட்டம்கிருஷ்ணகிரி, ஜன.26: கிருஷ்ணகிரியில்,  கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்  நடந்தது. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான  அசோக்குமார் தலைமை  வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கண்ணியப்பன், ரவி, மது(எ)  ஹேம்நாத், பாலசுப்பிரமணி, சைலேஷ் கிருஷ்ணன், ராமமூர்த்தி, தேவராசன்,  முன்னிலை வகித்தனர். கேசவன்  வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநரும், நடிகருமான  சுந்தர்ராஜன் கலந்து கொண்டு பேசினார். மனோரஞ்சிதம் நாகராஜ் எம்எல்ஏ., உள்ளிட்ட பலர் பேசினர். மாவட்ட துணைச் செயலாளர்  சாகுல்ஹமீது நன்றி கூறினார்.

Related Stories: