நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற நிலம் கையக சான்று கட்டாயமில்லை: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை பெறுவதற்கு நிலம் கையகப்படுத்தியதற்கான ஆதாரம் இனி கட்டாயமில்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியை பெறுவதற்கு நிலம் கையகப்படுத்தியதற்கான ஆதாரத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கோரிவந்தது.

நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் நேரத்தில் நில உரிமையாளர்களிடம் இருந்து சம்மதத்தை வாங்குவதற்கு வற்புறுத்தக்கூடாது. நிலம் கையகப்படுத்துதலின் நிலையை அனுமதி வழங்குவதுடன் இணைக்கக் கூடாது என்று அமைச்சகத்துக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தது. இதனை தொடர்ந்து இந்த விதிமுறை குறித்து மறுபரிசீலை செய்யப்பட்டது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘நிலக்கரி அல்லாத சுரங்க திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் நேரத்தில் நில உரிமையாளர்களிடம் இருந்து சம்மதம் பெறுவது அவசியமில்லை என்ற கோரிக்கை நியாயமானதாக தெரிகின்றது. எனவே அந்த கோரிக்கையை சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்கின்றது.நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை பெறுவதற்கு நிலம் கையகப்படுத்தியதற்கான ஆதாரம் இனி கட்டாயமில்லை’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: