ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு தேஜஸ்வி யாதவ் மனு மீது சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) 2 ஓட்டல்களின் செயல்பாட்டு ஒப்பந்தங்களை தனியாருக்கு வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், லாலு பிரசாத் யாதவ், அவரது மகள் தேஜஸ்வி யாதவ் மீது குற்றச்சாட்டு பதிய விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்தும் அதற்கு தடை விதிக்கக் கோரியும் தேஜஸ்வி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஸ்வரண காந்தா சர்மா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, நீதிபதி இந்த வழக்கில் சிபிஐ பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: