×

விற்பனை கருவியை வாபஸ் பெறக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்

தர்மபுரி, ஜன.26: தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், கைரேகை பதிவு முறையை ரத்து செய்யக்கோரி விற்பனை கருவியை ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்ட ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், தர்மபுரி வட்ட வழங்கல் அலுவலகம் முன் ரேஷன் பொருள் விற்பனை கருவியை ஒப்படைக்கும் போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்து பேசினார். போராட்டத்தின் போது, ரேஷன் பொருட்களை விற்பனை செய்யும் கருவியில் கைரேகை பதிவு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மேலும், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, ரேஷன் பொருட்கள் விற்பனை செய்வதற்கு நுகர்வோர்களின் கைரேகையை பதிவு செய்வதை ரத்து செய்யவேண்டும். அதற்கு பதில் கருவிழி மூலம் விற்பனை செய்யும் முறைக்கு மாற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகரன், மாவட்ட பொருளாளர் ஜான்ஜோசப், ராதா, ருக்மணி, சுகுணா, மணி, பாரதி, சுரேஷ், லட்சுமிபதி, கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், நல்லம்பள்ளியில் மாவட்ட பொருளாளர் ஜான்ஜோசப் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags : Ration shop employees ,
× RELATED ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை...