தீயணைப்பு துறை செயலி விழிப்புணர்வு

அரூர், ஜன.26: அரூர் தீயணைப்பு மீட்புப் பணி நிலைய அலுவலர் பழனிசாமி மற்றும் குழுவினர் பொதுமக்களுக்கு தீயணைப்பு துறை செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விபத்து மற்றும் அவசர காலங்களில் உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு பணியாற்றுவதற்கு ஏதுவாக தமிழக அரசு தீ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர், அரசுத்துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அரூர் கடைவீதி மற்றும் நீதிமன்ற வளாகம், 4 ரோடு, பேருந்து நிலையம்  உள்ளிட்ட இடங்களில் தீ செயலி உருவாக்கி எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் கூடும் முக்கிய சந்திப்புகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: