×

பாலக்கோட்டில் 50 ஏக்கர் நிலம் அபகரிக்க முயற்சி

தர்மபுரி, ஜன.26: பாலக்கோட்டில், தொழிலாளி குடும்பத்தை ஏமாற்றி 50 ஏக்கர் நிலம் மற்றும் வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கானு(50). விவசாய கூலி தொழிலாளியான இவர், தனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அதில், பாலக்கோடு டவுன் பகுதியைச் சேர்ந்த அல்லிசாவிற்கு நாங்கள் 8 பேர் வாரிசுகள். எங்களது மூதாதையருக்கு சொந்தமாக 50 ஏக்கர் நிலம் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த சொத்துக்களை ஒரு தரப்பினர் அபகரித்துக் கொண்டு, இதர வாரிசுதாரர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே, எங்களது மூதாதையாரின் சொத்துக்களை அனைத்து வாரிசுகளுக்கும் பிரித்து வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : land ,Balakot ,
× RELATED நடிகை வாணிஸ்ரீ-யின் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயன்றவர் கைது