நாட்டின் முன்னணி ஸ்டீல் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து செயற்கையாக விலையை ஏற்றியது விசாரணையில் அம்பலம்..!!

சென்னை: நாட்டின் முன்னணி ஸ்டீல் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து செயற்கையாக விலையை ஏற்றியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஸ்டீல் விலையை செயற்கையாக உயர்த்திய நிறுவனங்கள்

டாடா ஸ்டீல், JSW, அரசின் செய்ல் உள்பட 25 நிறுவனங்கள் கூட்டுசேர்ந்து செயற்கையாக விலையை ஏற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய போட்டி ஆணையத்தின் விசாரணையில் 25 நிறுவனங்களை சேர்ந்த 56 நிர்வாகிகள் சதியில் ஈடுபட்டது அம்பலமானது. நாட்டின் முன்னணி ஸ்டீல் நிறுவனங்கள் செயற்கையாக விலையை உயர்த்தியது விசாரணையில் அம்பலம்.

முன்னணி நிறுவனங்கள் சதியில் ஈடுபட்டது அம்பலம்

JSW ஸ்டீல் மேலாண் இயக்குநர் சஜ்ஜன் ஜிண்டல், டாடா ஸ்டீல் சி.இ.ஒ. நரேந்திரன் உள்ளிட்டோர் சதியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. SAIL நிறுவனத்தின் 4 முன்னாள் தலைவர்களும் செயற்கை விலை ஏற்ற சதியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2015 அக்டோபர்.6 இந்திய போட்டி ஆணையத்தின் உத்தரவுப்படி செயற்கை விலை ஏற்றம் 2015-2023 வரை நடந்தது கண்டுபிடிப்பு.

8 ஆண்டாக செயற்கையாக விலை ஏற்றியது கண்டுபிடிப்பு

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் தமிழக நீதிமன்றத்தில் 2021ல் தெரிவித்த தகவலின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

கோவை ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்த வழக்கில் விசாரணை

2021ல் 55% வரை செயற்கையாக ஸ்டீல் விலையை ஏற்றியதாக ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஸ்டீல் விநியோகத்தை குறைத்து செயற்கையாக தட்டுப்பாட்டை உண்டாக்கி விலை ஏற்றம் செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

செயற்கையாக தட்டுப்பாட்டை உண்டாக்கி விலை ஏற்றம்

கோர்ட் உத்தரவின்பேரில் இந்திய போட்டி ஆணையம் ஸ்டீல் நிறுவனங்கள் மீது விசாரணையை தொடங்கியது. 9 ஸ்டீல் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து விநியோகத்தை குறைத்து செயற்கையாக விலையை ஏற்றியதாக குற்றச்சாட்டு.ஸ்டீல் நிறுவனங்களின் 8 ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விவரங்களை போட்டி ஆணையம் பெற்றது.

வாட்ஸ் ஆப் மூலம் வெளிவந்த சதி

முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் வாட்ஸ் ஆப் மூலம் உரையாடி சதி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2022ல் இந்திய போட்டி ஆணையம் ஸ்டீல் நிறுவனங்களில் சோதனை நடத்தியிருந்தது. இந்திய போட்டி ஆணையத்தின் உயரதிகாரிகள் ஆய்வுக்குப் பின் ஸ்டீல் நிறுவனங்களின் பதில் பெறப்பட்டு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related Stories: