×

குடியரசு தின கிராம சபா கூட்டம் ரத்து கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

வேலூர், ஜன.26: நாட்டின் 61வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற இருந்த கிராம சபா கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று கலெக்டர்களுக்கு தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போதைய நிலையில் மக்கள் பெருமளவு கூடும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டு, 90 சதவீதத்துக்கும் மேல் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஆண்டு வழக்கமாக நடத்தப்பட இருந்த கிராம சபா கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த ஆண்டு குடியரசு தின கிராம சபா கூட்டம் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கொரோனா அச்சம் நீங்காததால் இன்று குடியரசு தின கிராம சபா கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை ஆணையர் பழனிச்சாமி அனைத்து கலெக்டர்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : Government ,cancellation ,Tamil Nadu ,meeting ,Republic Day Gram Sabha ,
× RELATED 10.5% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்