×

பெட்டியில் போடும் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை குறைதீர்வு கூட்டம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்

திருவண்ணாமலை, ஜன.26: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம், கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. துமக்கள் தங்கள் கோரிக்கைகளை கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தும் நடைமுறை கடந்த நவம்பர் மாதம் முதல் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டது. கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்திந்து நேரில் மனு அளிக்க வந்த பொதுமக்கள், அங்கிருந்த பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளது. கடைகள் திறந்துள்ளன. பஸ் போக்குவரத்து நூறு சதவீதம் இயங்குகிறது. சினிமா தியேட்டர்கள் செயல்படுகின்றன. பள்ளிகளும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது.

ஆனால், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் வாங்குவதற்கு மட்டும், கொரோனா கட்டுப்பாடு எனும் பெயரில் தயக்கம் காட்டுவது ஏன் என பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். லும், கோரிக்கை பெட்டியில் போடப்படும் மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதிகாரிகளுக்கு முறையாக மனு சென்று சேர்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு, தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க, திங்கள் கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்வு கூட்டம் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. கலெக்டரை நேரில் சந்தித்து அளிக்கும் எல்லா மனுக்களுக்கும் தீர்வு கிடைத்துவிடுவதில்லை. ஆனாலும், கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தால், தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.எனவே, அந்த நம்பிக்கையை காக்கும் வகையில், வரும் வாரத்தில் இருந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் பெற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags : grievance meeting ,Office ,Thiruvannamalai Collector ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் பள்ளி...