×

மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி போளூர் திமுக சார்பில்

போளூர், ஜன.26: போளூரில் திமுக மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகே நடந்தது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி போளூர் ஒன்றிய நகர திமுக மற்றும் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. எம்எல்ஏ கே.வி.சேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரனி அமைப்பாளரும், வந்தவாசி எம்எல்ஏவுமான எஸ்.அம்பேத்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ நா.பாண்டுரங்கன் திமுக மொழிப்போர் தியாகம் குறித்து பேசினார்.

Tags : martyrs ,language war ,Polur DMK ,
× RELATED ஓமலூரில் காங்கிரசார் அஞ்சலி