×

விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு ஆத்துரை கிராமத்தில்

சேத்துப்பட்டு, ஜன26: ஆத்துரை கிராமத்தில் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சேத்துப்பட்டு அடுத்த ஆத்துரை கிராமம் காந்திநகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று ஆலய வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி பூஜை, நவகிரக பூஜை, லட்சுமி பூஜை மற்றும் மந்திர யாகம் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து கலச புறப்பாடுகளுடன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆத்துரை, சித்தாத்துரை, பெரணம்பாக்கம் உட்பட பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து இரவு சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

Tags : Ganesha Temple Kumbabhishekam ,devotees ,village ,Athurai ,
× RELATED ஊழலில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது