தமிழகத்தில் விளையும் பொருட்களை ரேஷனில் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்யாறில் நடந்தது மாநில அரசு ெகாள்முதல் செய்ய வேண்டும்

செய்யாறு ஜன.26: தமிழகத்தில் விளையும் பொருட்களையே அரசு கொள்முதல் செய்து ரேசன் மற்றுமு் சத்துணவு திட்டத்தில் வழங்கிட வலியுறுத்தி பாமாயில், மசூர் பருப்பு, கோதுமைகளை கீழே கொட்டி விவசாயிகள் நூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் வாயிலில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பிரிதிநிதிகள் தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தியில் தேசிய அளவில் மூன்று ஆண்டு கிரீஸ் கர்மான் விருது பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மாநில அரசின் ரேஷன் மற்றும் சத்துணவுத் திட்டத்திற்கு 75 லட்சம் டன் பஞ்சாப்பிலிருந்து கோதுமையும், அரியானாவிலிருந்து அரிசியும், மராட்டியத்திலிருந்து மசூர் பருப்பும், மலேசியாவிலிருந்து பாமாயிலும் பிற வட மாநில விவசாயிகளிடமருந்து அத்தியாவசிய உணவு பொருட்களை அரசாங்க விலையில் கொள்முதல் செய்கின்றனர்.

அவ்வாறு கொள்முதல் செய்யும் உணவு பொருட்களை தமிழக மக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டுகிறது. மேலும், தமிழக உள்ளுர் உற்பத்தியான மணிலா, நெல், துவரை, பச்சைப்பயறு, காராமணி போன்றவற்றை கொள்முதல் செய்ய அரசு மறுக்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ளூர் உணவு பொருட்கள், தானிய பொருட்கள் லாப விலை கிடைப்பதில்லை. னவே அரசு கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு மணிலா, நெல், பருப்பு மாநில நெல் ரகம் அரசு கொள்முதல் செய்து உள்ளுர் விவசாயிகள் பலம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோதுமை, மசூர் பருப்பு, பாமாயில் போன்றவற்றை கீழே கொட்டி அழித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் விளையும் பொருட்களையே அரசு கொள்முதல் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஆர்டிஓ கி.விமலாவிடம் நேற்று அளித்தனர்

Related Stories: