திருவனந்தபுரம் : பத்திரிகையாளர் ஒருவருக்கு ரூ.20,000க்கு பதில் ரூ.16.5 லட்சம் கேரள பல்கலைக்கழகம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்பு எடுத்ததற்காக பிரேசிலைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவருக்கு பல்கலை. பணம் அனுப்பியிருந்தது. பத்திரிகையாளருக்கு 20,000 ரூபாய் அனுப்புவதற்கு பதில் 20,000 டாலரை பல்கலை. நிர்வாகம் தவறுதலாக அனுப்பியுள்ளது.
