ஆதார் திருத்த சிறப்பு முகாம்

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம் மேல்மணம்பேடு, வெள்ளவேடு ஆகிய ஊராட்சிகளுக்கு மேல்மணம்பேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேமுதிக மாவட்ட துணை செயலாளர் புஜ்ஜி ஜெ.முரளி கிருஷ்ணன் ஏற்பாட்டில் ஆதார் திருத்தம் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த முகாமில் புதிய ஆதார் அட்டை எடுத்தல், முகவரி மாற்றம் செய்தல், புகைப்படம் மாற்றம் செய்தல், கைபேசி எண்ணை ஆதார் அட்டையுடன் இணைத்தல், ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த முகாமில் மேல்மணம்பேடு ஊராட்சி மற்றும் வெள்ளவேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 250 பேர் பங்கேற்று பயனடைந்தனர். மேலும் இதுபோன்ற பயனுள்ள முகாம்களை மீண்டும் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

Related Stories:

>