×

பள்ளி சாரா கல்வி இயக்ககம் சுற்றறிக்கை கற்போர் மையங்களில் அலுவலர்கள் ஆய்வு செய்து

வேலூர், ஜன.24: கற்போர் மையங்களில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை தன்னார்வல ஆசிரியர்கள் வருகைப்பதிவு பதிவேற்றத்தை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதுகுறித்து பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் வழிக்காட்டுதல்களின்படி ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்‘ என்கிற வயது வந்தோர் கல்வித்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போர் மையங்களில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட உதவி திட்ட அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொறுப்பு), மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் என அனைத்து அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கற்போர் மையங்களை பார்வையிட்டு, அவற்றின் விவரங்களையும் கற்போர் மையத்தில், கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் தன்னார்வல ஆசிரியர் மற்றும் கற்போர் வருகைப்பதிவு விவரங்களை டிஎன்-எமிஸ் கைப்பேசி செயலியில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்தும், கற்போர் மைய பார்வைக்குறிப்புகளை டிஎன்-எமிஸ் கைப்பேசி செயலியில் தவறாது பதிவேற்றம் செய்திடும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கண்காணிப்பு அலுவலர்களுக்கான, கற்போம் மைய செயல்பாடுகள் கண்காணிப்பு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் வகையில் டிஎன்-எமிஸ் கைபேசி செயலியில் ஆக்ட்டிவ் செய்யப்பட்டுள்ளன. எனவே அனைத்து அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கற்போர் மையத்தினை தவறாது பார்வையிட்டு அவற்றின் விரவங்களையும், கற்போர் மையத்தில், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், தன்னார்வல ஆசிரியர் மற்றும் கற்போர் வருகைப்பதிவு விவரங்களை டிஎன்-எமிஸ் கைபேசி செயலியில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்தும், கற்போர் மைய பார்வைக்குறிப்புகளை பார்வையிட்டு அன்றே டிஎன்-எமிஸ் கைபேசி செயலியில் தவறாது பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Directorate of Non-School Education ,learning centers ,
× RELATED தேர்தல் பிரசார வாகனங்களில்...