மாஜி ராணுவ வீரர் பாம்பு கடித்து பலி

நெய்வேலி, ஜன. 24: வடலூர் வன்னியர் தெருவை சேர்ந்தவர் அசோக் (38). இவர் இந்திய ராணுவத்தில் 17 வருடங்களாக பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் பாம்பு பிடிப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்து வந்துள்ளார். வடலூர் பகுதியில் வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால், அதனை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டுவிடுவார். இந்நிலையில் நேற்று வடலூர் அருகே கோட்டக்கரை பகுதியில் ஒரு வீட்டில் நல்ல பாம்பு புகுந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அசோக்  வீட்டில் இருந்த பாம்பை பிடித்து சாக்கு மூட்டையில் கட்டி உள்ளார்.

அப்போது சாக்கு மூட்டையில் உள்ள ஓட்டையின் வழியாக கீழே இறங்கிய பாம்பு அசோக் காலில் கொத்தி உள்ளது. உடனே அசோக் தன்னுடைய வீட்டில் இருந்த பரம்பரை வைத்திய மருந்தை அருந்திவிட்டு அருகிலுள்ள குறிஞ்சிப்பாடி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மாஜி ராணுவ வீரரை பாம்பு கடித்த சம்பவம் வடலூரில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: