கொரோனாவுக்கு மூதாட்டி பலி புதுவையில் புதிதாக 36 பேருக்கு தொற்று

புதுச்சேரி, ஜன. 24: புதுச்சேரிசுகாதாரத்துறை செயலர் அருண் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் 3,296 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 16, காரைக்கால்- 3, மாகே- 17 என மொத்தம் 36 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், பாகூரை சேர்ந்த 63 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 644 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் உள்ளது.

 புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38,830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிப்மரில் 21 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 53 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 302 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37,884 (97.56 சதவீதம்) ஆக உள்து. இதுவரை 5,53,893 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,10,503 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>