போலி பெயிண்ட் விற்பனை செஞ்சியில் கடை உரிமையாளர், விற்பனை முகவர் அதிரடி கைது

செஞ்சி, ஜன. 24: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பெயிண்ட் கடைகளில் போலியாக சில முன்னணி நிறுவனத்தின் பெயிண்ட் விற்பனை செய்யப்படுவதாக சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு புகார் சென்றது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கம்பெனி ஊழியர்கள் 8 பேர் கொண்ட குழுவினர் செஞ்சி பகுதியில் உள்ள பெயிண்ட் கடைகளில் மேற்கொண்ட ரகசிய சோதனையில் கம்பெனி பெயரில் போலியாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெயிண்ட் டப்பாக்களை கைப்பற்றி செஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், போலீசார் மேற்கொண்டு, விசாரணை செய்து கொண்டு இருந்த போது போலி பெயிண்ட் விற்பனை முகவராக வந்த சென்னையை சேர்ந்த பெயிண்ட் விற்பனை முகவர் ராயபுரம் குமார் (57), செஞ்சி திண்டிவனம் சாலையில் பெயிண்ட் கடை நடத்தி வந்த தாமனூர் கிராமத்தை சேர்ந்த சூசை மகன் தேவராஜ் (42) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவராஜிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள போலி பெயிண்ட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

  செஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளில் அதிகளவு போலி பெயிண்ட் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனை பயன்படுத்தினால் ஒரே வருடத்தில் மங்கி விடுவதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இது போன்று  கம்பெனி பெயர்களை பயன்படுத்தி போலியாக பெயிண்ட் விற்பனை செய்து அதிக லாபம் பார்த்து வருபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories: