செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 400 பெண் குழந்தைகளுக்கு அஞ்சல் கணக்கு துவக்கம்

விளாத்திகுளம், ஜன.24: விளாத்திகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியநாயகிபுரத்தில் 10 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு துவங்கும் விழா நடந்தது.

கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கோட்ட பொறியாளர் பாண்டியராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சின்னப்பன் எம்எல்ஏ பெண் குழந்தைகளுக்கு அஞ்சல் கணக்கை தொடங்கி வைத்து பாஸ் புத்தகத்தை வழங்கினார்.

தொடர்ந்து சூரங்குடி, வேம்பார் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அஞ்சல் கணக்கு தொடங்கப்பட்டது. சுமார் 400 பெண் குழந்தைகளுக்கு தனது சொந்த பணத்தில் ரூ.1 லட்சத்தை சின்னப்பன் எம்எல்ஏ வழங்கி கணக்கை துவக்கி வைத்தார்.

விழாவில் யூனியன் முனியசக்தி ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலரும் ஒன்றிய செயலாளருமான நடராஜன், முன்னாள் யூனியன் சேர்மன் வரதராஜபெருமாள், துணை அஞ்சலக கண்காணிப்பாளர் சீதாலட்சுமி, அஞ்சலக ஆய்வாளர் கேத்ரபாலன், வணிக மேம்பாடு அலுவலர்கள் மாலதி, சங்கரேஸ்வரி, எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளர் போடுசாமி, ஜெ.பேரவை ஒன்றியச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், மாணவரணி ஒன்றிய செயலாளர் ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: