தீயணைப்பு புதிய செயலி தென்காசியில் அறிமுகம்

தென்காசி, ஜன. 24: தென்காசியில்   தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம்  சார்பில் தீயணைப்பு துறையின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தீ  ஆப் செயலி குறித்த விளக்க கூட்டம் நடந்தது. தமிழக அரசு தீயணைப்பு துறையின் சார்பில் தீ  ஆப் செயலி என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் பயன்பாடுகள் குறித்த விளக்கக் கூட்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம்  சார்பில்  தென்காசியில் நடந்தது. தலைமை வகித்த தென்காசி தீயணைப்பு நிலைய பொறுப்பு  அலுவலர் சுந்தர்ராஜன், ஏட்டு கணேசன், மற்றும் பணியாளர்கள் புதிய பஸ்நிலையம், பஜார்  மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் விளக்கக்கூட்டம் நடத்தி துண்டுபிரசுரம் வழங்கினர்.

Related Stories:

>