இளம்பெண் தற்கொலை

கேடிசி நகர், ஜன. 24: விஎம் சத்திரம் அருகே பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பாளை வி.எம். சத்திரம் அருகே அப்துல்ரகுமான் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் மோனிஷா (26). பி.இ. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படித்துள்ள இவர், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலிருந்தே வேலை பார்த்து வந்தார்.  நேற்று முன்தினம் அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த பாளை பெருமாள்புரம் போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>