நெல்லையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

நெல்லை, ஜன. 24: நெல்லையில் மனித  உரிமைகள் ஆர்வலரான வக்கீல் அல்பி நிஜாம் தலைமையில் நூற்றுக்கணக்கான  இளைஞர்கள் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர்  அப்துல் வகாப் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

 நெல்லை மாவட்டதைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரும்  வக்கீலுமான அல்பி நிஜாம் தலைமையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாற்றுக்கட்சியினர் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர திமுக செயலாளரான  ஏ.எல்.எஸ் லட்சுமணன், வக்கீல் அணி மாவட்டச் செயலாளர் வக்கீல் தினேஷ், மாநகரச் செயலாளர் வக்கீல் உமாமகேசுவரன்,  மாவட்ட துணை அமைப்பாளர் அருள் மாணிக்கம், நெசவாளர் அணி மாவட்டச் செயலாளர் துபை சாகுல், மாவட்டப் பிரதிநிதி அலி சேக் மன்சூர், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வக்கீல் ராஜா, வக்கீல்கள் சித்திக், ராஜூ , சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் நாகூர் கனி உள்ளிட்ட நிர்வாகிகள் எஎ ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>