×

நெல்லை மண்டல போக்குவரத்து ஊழியர்கள் 434 பேருக்கு ரூ.88.58 கோடி அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்

நெல்லை, ஜன. 24: நெல்லை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 434 பேருக்கு ரூ.88.58 கோடி ஓய்வூதியப் பலன்கள் வழங்கும் பணிகளை அமைச்சர் ராஜலட்சுமி துவக்கிவைத்தார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நெல்லை மண்டலத்தில் 2019 ஏப்ரல் முதல் 2019 டிசம்பர் முடிய  ஓய்வுபெற்ற ஊழியர்கள் 434  பேருக்கு ரூ.88.58 கோடி மதிப்பிலான ஓய்வூதியப் பலன்களை வழங்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சங்கரன்கோவில்  போக்குவரத்து பணிமனை வளாகத்தில் ஓய்வூதியப் பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது. மனோகரன் எம்.எல்.ஏ., போக்குவரத்து  நிர்வாக இயக்குநர் திருவம்பலம் பிள்ளை, தலைமை கணக்கு அதிகாரி மாரியப்பன், ஆர்டிஓ முருகசெல்வி, சங்கரன்கோவில் பணிமனை கிளைமேலாளர் கோபாலகிருஷ்ணன்   முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் ராஜலட்சுமி, போக்குவரத்து ஊழியர்களுக்கு  ரூ.88.58 கோடி மதிப்பிலான ஓய்வூதியப் பலன்களை வழங்கும் பணிகளை துவக்கிவைத்தார்.

 பின்னர் பொது நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.10 லட்சத்தில் சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனை வளாகத்திற்கு தார்சாலை அமைக்கும்  பணிக்கான பூமிபூஜையிலும் பங்கேற்று பணியைத் துவக்கிவைத்தார். நிகழ்ச்சிகளில் தாசில்தார் திருமலைசெல்வி,  சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர்  சாந்தி,   மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் கண்ணன், நகராட்சி பொறியாளர் முகைதீன்  அப்துல்காதர், சுகாதார அலுவலர் பாலசந்தர், நெல்லை மாவட்ட கூட்டுறவு பேரங்காடி துணைத்தலைவர்  வேலுச்சாமி,  நகர அவைத்தலைவர் கந்தவேல்,  ஒன்றிய செயலாளர்கள் சுப்பையா  பாண்டியன்,  வேல்முருகன்,  ரமேஷ், வாசுதேவன்,  அறங்காவலர் குழு உறுப்பினர் கருப்பசாமி,  எம்ஜிஆர் மன்றம் ரவிச்சந்திரன்,  கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆறுமுகம், ராமநாதன், போக்குவரத்து  அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் பகவதிமுருகன்,  செயலாளர்  கந்தசாமிபாண்டியன், பொருளாளர் வேலுபாண்டியன், சங்கரன்கோவில் பணிமனை அண்ணா  தொழிற்சங்க செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் ஆத்மநாதன், மாவட்ட  ஆதிதிராவிடர் நலன் மற்றும் வன்கொடுமை தடுப்பு குழு உறுப்பினர் மாரியப்பன்,  ஜெ. பேரவை நகரச் செயலாளர் சவுந்தர் என்ற சாகுல் ஹமீது, முன்னாள்  கவுன்சிலர்கள்  முத்துக்குட்டி, ஜெயலட்சுமி, ராமதுரை, நிலவள வங்கி தலைவர்  லட்சுமணன் உள்ளிட்ட  ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Rajalakshmi ,Nellai Zonal Transport ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே வீட்டை...