புகையிலை விற்ற 3 பேர் கைது

திருப்பூர், ஜன.24: திருப்பூர், அவிநாசி ரோடு அணைப்புதுார் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அங்கு 27 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், விற்பனையில் ஈடுபட்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்தீப் குமார் (22), ஜோதாராம் (30), திருப்பூரை சேர்ந்த சுரேஷ் (25) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

Related Stories:

>