10 மையங்களில் இன்று தேசிய திறனாய்வு தேர்வு

திருப்பூர், ஜன.24: கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தேர்வு இன்று (24ம் தேதி) நடக்கிறது. திருப்பூர் மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 942 மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். ஹால்டிக்கெட் கடந்த 18ம் தேதி வினியோகிக்கப்பட்டுள்ளது. அவிநாசி ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்கோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, மூலனுார் அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் என்.சி.பி., நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் பெண்கள் பள்ளி, உடுமலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் உள்ளிட்ட 10 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories:

>