காவல்துறை சார்பில் பழங்குடியின கிராமங்களில் குறை தீர்க்கும் கூட்டம்

ஊட்டி, ஜன. 24:  எல்லையோர பழங்குடியின கிராமங்களில் காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில், குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. நீலகிரி  மாவட்ட காவல்துறை சார்பில் மாதம் தோறும் எல்லையோரங்களில் உள்ள பழங்குடியின  கிராமங்களில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.  பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறைகளுக்கு  அனுப்பப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில்,  கொலக்கொம்பை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேம்புக்கரை, இந்திரா நகர்,  மரிகோடு ஆகிய பகுதிகளிலும், மஞ்சூர் ஆகிய காவல்நிலையங்களுக்குட்பட்ட  அவலாஞ்சி மந்து, சோலூர் மட்டம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நட்டக்கல்,  வாகப்பனை பகுதிகளில் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

  மேலும்,  மசினகுடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூதநத்தம், நியூஹோப் காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட எல்லமலை, நஞ்சய் நகர், நாயகன்பாடி, நெலாக்கோட்டை காவல்  நிலையத்திற்குட்பட்ட போர்டு காலன, கொட்டாய்மேடு ஆகிய பகுதிகளில் உள்ள  பழங்குடியின கிராமங்களில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.  கூட்டத்தில், அனைத்து துைறயை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு குறைகளை  கேட்டறிந்தனர். இந்த முகாமில், 415 பழங்குடியின மக்கள் கலந்துகொண்டு  பல்வேறு தேவைகளை வலியுறுத்தி 183 மனுக்களை வழங்கினர். குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியின மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

கொலக்கம்பை காவல் நிலையத்திற்குட்பட்ட சோம்பு கரை, இந்திரா நகர், மாரிகோடு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்றது. சப்-கலெக்டர் ரஜ்ஜித் சிங் தலைமையில் பழங்குடியினருக்கு 24 சாதி சான்றிதழ் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தக பை மற்றும் பேனா பென்சில் போன்றவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் காவல் துறை சார்பில், குன்னூர் டி.எஸ்பி. குமார் கலந்து கொண்டார். மேலும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: