×

கோவை மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா

கோவை, ஜன. 24:  கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 47 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்  துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையை சேர்ந்த 47  பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 966 ஆக  உயர்ந்துள்ளது.  கோவையில் 6 மாதங்களுக்கு பின் தினசரி பாதிப்பு  எண்ணிக்கை 50க்கு கீழ் குறைந்துள்ளது. மேலும் நேற்று கொரோனா நோய்த்  தொற்றுக்கு சனிக்கிழமை உயிரிழப்பு ஏதுமில்லை. அரசு  மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில்  சிகிச்சைப் பெற்று வந்த 64 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.  கோவையில் இதுவரையில் 52 ஆயிரத்து 802 பேர் கொரோனாவில் இருந்து  குணமடைந்துள்ளனர். தற்போது 498 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 500க்கும் கீழ்  குறைந்துள்ளது.

Tags : Corona ,Coimbatore ,district ,
× RELATED கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு