தமிழக முதல்வருக்கு ‘சமூக கல்வி காவலர்’ விருது

கோவை, ஜன. 24: கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்துரையாடல் கூட்டம் கோவை போத்தனூர் ரோடு சங்கமம் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் பஷீர்அகமது, பொருளாளர் கிதர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான சிடிசி அப்துல்ஜ ப்பார் வரவேற்றார். இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘சமூக கல்வி காவலர்’ என்னும் விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கியதின் மூலம், நடப்பு கல்வியாண்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் 486 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

எனவே, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்த விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜூனன், எட்டிமடை சண்முகம், கோவை மாவட்ட ஜமாஅத் நிர்வாகிகள் அயூப், இப்ராகீம், குனியமுத்தூர் ஜப்பார், வக்கீல் அனீபா, அமீர்அலி, அப்துல்ரகுமான், நூர்முகமது மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள 120 ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>