×

மாவட்டத்தில் 13 மையங்களில் இன்று ஊரக திறனாய்வு தேர்வு

ஈரோடு, ஜன. 24:  ஈரோடு மாவட்டத்தில் இன்று (24ம் தேதி) 13 மையங்களில் ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வினை 1,338 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கிராமப்புறத்தில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்களுக்காக ஊரக திறனாய்வு தேர்வினை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இத்தேர்வில் பங்கேற்க தகுதி பெற்றால், மாணவ-மாணவிகள் பிளஸ் 2 முடிக்கும் வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 தமிழக அரசால் வழங்கப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு இன்று (24ம் தேதி) நடைபெற உள்ளது.

இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, சத்தி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் 13 மையங்களில் 1,338 மாணவ-மாணவிகள் தேர்வினை எழுத உள்ளனர். இத்தேர்வுக்கான வினாத்தாள் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறையினர் செய்துள்ளனர்.

Tags : centers ,Rural Performance Examination ,district ,
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...